கரூர் நெரிசல்: விஜய்யை பார்க்க வந்து குழந்தைகளை தவறவிட்ட பெற்றோர்.. தேடுதல் பணிகள் தீவிரம்

மாவட்டம் வாரியாக பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று கரூரில் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தார். அவரை பார்க்க பிரச்சார கூட்டத்திற்கு வந்த மக்களிடையே நெரிசல் ஏற்பட்டது. இதில் 40க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மறுபுறம், குழந்தைகள் பல காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நெரிசலில் சிக்கி 6 குழந்தைகள், 16 பெண்கள், 9 ஆண்கள் என மொத்தம் 40 பேர் உயிரிழந்துள்ளனர். பல குழந்தைகள் காணவில்லை. எனவே பலி எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

குறிப்பாக குழந்தைகள் பலரும் காணவில்லை என்பதால் அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவம் தமிழ்நாடு மட்டுமல்லாது நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Facebook Comments Box