விஜய் சொல் சொல் கேட்காத தவெகவினர்.. கரூர் கூட்ட நெரிசலில் பலி அதிகரித்தது எப்படி? சோகம் பின்னணி

கரூரில் இன்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 6 குழந்தைகள், 16 பெண்கள், 9 ஆண்கள் உள்பட 31 பேர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்பு சம்பவம் தமிழகத்தை உலுக்கி உள்ளது. இந்நிலையில் தான் விஜய் சொல் சொல் தவெக தொண்டர்கள் கேட்காததே இந்த பலிக்கு காரணம் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இன்று இரவு கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரை காண ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். அப்போது திடீரென கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலியாகினர். 6 குழந்தைகள், 16 பெண்கள், 9 ஆண்கள் உள்பட 31 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிர் பலி இன்னும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்த சம்பவம் தமிழகத்தை உலுக்கி உள்ளது. உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்கள் மருத்துவமனையில் கண்ணீர் மல்க குவிந்துள்ளனர். இது பெரும் சோகம் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் விஜய் சொல் சொல் தவெக தொண்டர்கள் செய்த செயல் தான் உயிரிழப்புக்கு முக்கிய காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதாவது ஏற்கனவே தவெக தலைவர் விஜய் சார்பில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தார். அதில், விஜய் சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்களும், பொதுமக்களும் பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டு இருந்தது.

அதில், “கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் நேரில் வந்து கலந்துகொள்வதை தவிர்க்க வேண்டும். அவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடியே நேரலையில் விஜய் சுற்றுப்பயணத்தை கண்டு மகிழவேண்டும்.

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, அப்பகுதிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும், பொது மக்களுக்கும், வாகன ஒட்டிகளுக்கும், பள்ளி மாணாக்கர்களுக்கும், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கும் எவ்விதப் போக்குவரத்து இடையூறும் ஏற்படாத வகையில் கலந்துகொள்ள வேண்டும்” என்று கூறப்பட்டு இருந்தது.

ஆனால் விஜயின் தொண்டர்கள் இதனை பின்பற்றவில்லை. பெண்கள், முதியவர்கள், குழந்தைகளுடன் பிரசாரத்தில் பங்கேற்றனர். இதை செய்யாமல் இருந்தால் உயிர் பலி குறைந்திருக்கலாம். ஏனென்றால் இன்று பலியானவர்களில் 6 குழந்தைகள், 16 பெண்களும் அடங்குவர். விஜயின் பேச்சை கேட்டு இருந்தால் ஓரளவு உயிர் பலி குறைந்து இருக்கலாம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

Facebook Comments Box