ஷட்டரை இறக்கிய விஜய்.. அவர் செய்த பெரிய தவறு இதுதான்.. நேரில் பார்த்தவர் சொன்ன.. திடுக் தகவல்!

கரூரில் நடிகர் விஜய் செய்த ஒரு காரியம்தான் பலர் கூட்ட நெரிசலில் சிக்க காரணமாக அமைந்ததாக அங்கே இருந்த பலர் குறிப்பிட்டு உள்ளனர். சம்பவத்தை நேரில் பார்த்த பலர் விஜய் மீது கடுமையாக விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

இன்று கரூரில் கூட்ட நெரிசல், அதனால் ஏற்பட்ட மரணங்களை நேரில் கண்ட பலர் ஊடகங்களில் பேசுகையில், குறுகிய இடத்தில் பலர் கூடியதே இதற்கு காரணம். அதோடு பலர் அங்கேயே மயங்கி விழுந்து விட்டனர். ஆனால் அதை விஜய் பார்க்க கூட இல்லை.

விஜய் செய்த தவறு

இன்னும் சொல்லப்போனால் பலர் அங்கங்கே மயங்கி விழுந்த நிலையில் கிடந்தனர். அதற்கு இடையில்தான் விஜய் பேசிக்கொண்டு இருந்தார். இன்னும் சொல்லப்போனால் ஒரு கட்டத்தில் விஜய் தேவையின்றி தன் சீட் இருக்க கூடிய கண்ணாடியை திறந்தார்.. அவர் ஷட்டரை கொஞ்சம் லேட்டாக திறந்து இருக்கலாம்.

ஆனால் தேவையின்றி முனியப்பன் கோவில் அருகிலேயே அவர் ஷட்டரை திறந்துவிட்டார். அவர் கண்ணாடியை திறந்ததை பார்த்ததும் மக்கள் ஓடி வந்தனர். அங்கிருந்தே அவர் கையசைத்தபடி வந்தார். அதற்கு பின் 300 – 400 மீட்டர் தாண்டி உள்ள இடத்திலதான் விஜய் பேசினார். அவர் முன்கூட்டியே கண்ணாடியை திறந்து வந்ததால் அவரை பார்க்க பலர் ஓடி வந்தனர். இதுதான் கூட்டம் நெரிசல் ஆகி, தள்ளுமுள்ளு ஏற்பட காரணமாக மாறிவிட்டது.

அவர் செய்த இந்த தவறுதான் பல மரணங்களுக்கு காரணமாக மாறிவிட்டது என்று நேரில் பார்த்த பலர் தெரிவித்து வருகின்றனர்.

விரையும் ஸ்டாலின்

இதையடுத்து நாளை முதல்வர் ஸ்டாலின் கரூருக்கு விரைய உள்ளார். இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட போஸ்டில், கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் மா. சுப்பிரமணியன் அவர்களையும் – மாவட்ட ஆட்சியரையும் தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளேன்.

அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களிடமும் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன். அங்கு, விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள ADGP-யிடமும் பேசியிருக்கிறேன். பொதுமக்கள், மருத்துவர்கள் மற்றும் காவல் துறைக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

உயரும் பலி எண்ணிக்கை

கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் 40 பேர் வரை பலியானதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 31 பேர் மரணம் உறுதி செய்யப்பட்ட நிலையில் அதிகாரபூர்வ பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வில் 6 குழந்தைகள் பலியானதாக கூறப்படுகிறது.

பலர் ஆம்புலன்சில் கொண்டு வரப்படுவதால் கரூர் அருகே உள்ள மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க அமைச்சர் அன்பில் மகேஷ்க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து தற்போது தமிழ்நாடு சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் கரூர் விரைந்துள்ளார்.

Facebook Comments Box