கரூரில் 100 அடி சாலையில் 60 அடி பேருந்து – கூட்ட நெரிசலில் 33 பேர் பலி!

கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரச்சார பேருந்து 100 அடி சாலையில் 60 அடி பரப்பில் நுழைந்த போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பலர் ஒருவர் மீது ஒருவர் விழுந்து உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் 6 குழந்தைகள், 16 பெண்கள் உள்பட மொத்தம் 33 பேர் பலியாக, மேலும் 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாமக்கல், சேலம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மருத்துவர்கள், செவிலியர்கள் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை அளிக்க வரவழைக்கப்பட்டனர்.

கரூர் அரசு மருத்துவமனையில் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பவத்தின் அதிர்ச்சியில் உள்ளனர். முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி எம்எல்ஏ, சம்பவ இடம் சென்று சிகிச்சை பணிகளை நேரில் பார்வையிட்டார்.

சம்பவத்துக்கான காரணம்: 100 அடி சாலையில் 60 அடி பேருந்து நுழைந்ததால் மக்கள் வெளியேற முடியாமல் நெரிசலில் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. சிலர் ஒருவர் மீது ஒருவர் விழுந்து, அதனால் பலர் உயிரிழந்தனர்.

Facebook Comments Box