கரூர் துயரம்… அப்பாவி மக்களின் உயிரிழப்பு நெஞ்சை உலுக்கி வேதனை அளிக்கிறது – ரஜினிகாந்த்

தவெக பிரச்சார கூட்டத்தில் குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் உட்பட 34 பேர் உயிரிழந்த சம்பவம் வேதனை அளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். கரூரில் நிகழ்ந்த அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது என்றும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்தார். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் கரூர் பிரச்சாரக் கூட்டத்தில் 34 பேர் உயிரிழந்தனர். அதிகளவு கூட்டம் குவிந்ததால், கூட்ட நெரிசலில் பலர் மயங்கி விழுந்தனர். உடனடியாக தண்ணீர் வழங்கப்பட்டு ஆம்புலன்சுகள் வரவழைக்கப்பட்டு, காயமடைந்த பலரை மருத்துவமனைக்கு அனுப்பினர்.

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 34 பேர் உயிரிழந்தனர். பெண்கள், இளைஞர்கள், குழந்தைகள் உட்பட பல தரப்பினரும் உயிரிழந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் உடனடியாக தலைமைச் செயலகத்தில் அவசரக் கூட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் தனி விமானம் மூலமாக உடனடியாக கரூருக்கு புறப்பட்டார்.

கரூரில் நடந்த துயரச் சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் உட்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது:

  • கரூரில் நிகழ்ந்த அப்பாவி மக்களின் உயிரிழப்பு நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது.
  • உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
  • காயமடைந்தோருக்கு ஆறுதல்கள்.

உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் நிதி உதவி, காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து மருத்துவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களுக்கு முழுமையான சிகிச்சை வழங்க மாவட்ட நிர்வாகத்தை தமிழக அரசு முடுக்கிவைத்துள்ளது.

Facebook Comments Box