ஸ்ரீமான். ஆறுமுகம் பாகவதர் மறைவு
வாழ்நாளின் கடைசி ஆண்டுகளில் சுமார் எட்டு வருடங்கள்
வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரமத்தில் தங்கியிருந்து
முருகனை அர்ப்பணிப்போடு வழிபட்டவராவார்.
இறுதிக் கட்டத்தில்
பொன். குமார்ஜி அவர்கள் வழிகாட்டும்
நாகர்கோவில் அபய கேந்திரத்தில்
தங்கியிருந்து வாழ்ந்தார்.
தன்னுடைய 108-வது வயதில்
இன்று 04/08/2025 (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில்
வேலவனின் திருவடிகளில் லயித்துவிட்டார்.
இறுதி அஞ்சலி நிகழ்வு
மதியம் மூன்று மணி அளவில்
வெள்ளிமலை விவேகானந்தா ஆசிரம தலைவர்
ஸ்வாமி சைதன்யானந்தஜி மகராஜ் தலைமையில் நடைபெற்றது.
அதிலும் வெள்ளிமலை சின்ன சுவாமிஜி,
நெட்டாங்கோடு சாரதா ஆசிரம மாதாஜிகள்,
மார்த்தாண்டம் அனஸ்வரா பவுண்டேஷன்,
சுரதவனம் முருகதாஸ் ஜி,
மண்டைக்காடு பகவதி அம்மன் சேவா டிரஸ்ட் செயலாளர் வாமனன்ஜி,
ஃபவுண்டேஷன் தலைவர் உமாசங்கர்ஜி,
வாத்சல்யம் சுரேஷ் ஜி,
சேவா பாரதி அசோகன் ஜி, RK ஜி,
ஆலய பாதுகாப்புச் சங்க மாநில பொறுப்பாளர் டாக்டர் தெய்வப்பிரகாஷ் ஜி,
பாகவதர் அவர்களின் மாணவர்கள் என
பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.
நமது ஆஸ்ம அன்பர் தேவ. ராஜேந்திரகுமார் அவர்கள்
ஆத்ம சாந்தி பிரார்த்தனையை நிகழ்த்தினர்.
மாலை 4.15 மணிக்கு
புத்தேரி அமிர்தவனம் மயானத்தில்
தகனச் செயல்முறை மேற்கொள்ளப்பட்டது.
இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகளை
பொன் குமார்ஜி அவர்கள் மிக சிறப்பாக செய்திருந்தார்கள்.
அன்னாரின் அஸ்தி கடலில் கலக்கும் நிகழ்வு
நாளை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது.
ஐயா இப்போது நம்மிடையே இல்லை என்றாலும்…
“எங்கும் உன் ஆடல் அம்மா தாயே…”
என்று இவர் மிகவும் விரும்பிப் பாடும்
அந்த புகழ்பெற்ற பாடல்
இன்றும் காதுகளில்