WhatsApp Channel
ஆப்கானிஸ்தான் அணி சார்பாக ஹஸ்மத்துல்லா ஷாஹிடி 56 ஓட்டங்களையும், ரஹ்மத் ஷா 52 ஓட்டங்களையும் பெற்றனர்.
உலக கோப்பை தொடரில் இன்று ஆப்கானிஸ்தான் – நெதர்லாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த நெதர்லாந்து அணி ஆப்கானிஸ்தானின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.
நெதர்லாந்து அணி 46.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நெதர்லாந்து அணியில் ஏங்கல்பிரெக்ட் 58 ரன்கள் எடுத்தார். அதன்பின் 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களம் இறங்கியது.
ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக குர்பாஸ் மற்றும் இப்ராகிம் ஜத்ரன் களமிறங்கினர். இதில் குர்பாஸ் 10 ரன்களும், இப்ராஹிம் 20 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். பின்னர் ரஹ்மத் ஷாவும், ஹஸ்மத்துல்லா ஷாஹிதியும் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இதில் ரஹ்மத் ஷா அரைசதம் அடித்து 52 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஹஸ்மத்துல்லா ஷாஹிதியுடன் ஒமர்சாய் ஜோடி சேர்ந்தார். இறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 31.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி சார்பாக ஹஸ்மத்துல்லா ஷாஹிடி 56 ஓட்டங்களையும், ரஹ்மத் ஷா 52 ஓட்டங்களையும் பெற்றனர்.
Discussion about this post