WhatsApp Channel
ஐபிஎல் தொடரில் மும்பை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை நடைபெற உள்ளது.
ஐபிஎல் போட்டியில் 10 அணிகள் பங்கேற்றன. இந்த தொடரின் 17வது சீசன் கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக விளையாடி வருகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் 2 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
நாளை நடைபெறும் 2வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இந்நிலையில், இந்த போட்டியில் டெல்லி அணியில் இருந்து முக்கிய வீரரான ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் விலகியுள்ளார். சிறிய காயம் காரணமாக விலகுவதாக டெல்லி அணியின் இயக்குனர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். அவரது விலகல் டெல்லி அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
Discussion about this post