1. தமிழக அரசியல் வரலாற்றிலேயே ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட முதல் முதலமைச்சர் கருணாநிதி.
2. அந்த ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்ட முதல் முதலமைச்சர் கருணாநிதி.
3.தமிழ்நாட்டில் குடும்ப அரசியலை அறிமுகப்படுத்தியவர்
கருணாநிதி.
4.தமிழ் நாட்டில் வாரிசு அரசியலை அறிமுகப்படுத்தியவர் கருணாநிதி.
5.பல்லாயிரம் தொண்டர்கள் உழைத்து கட்டிய ஒரு கட்சியை தன் சொந்த உடைமை ஆக்கிக் கொண்டவர் கருணாநிதி.
6. தமிழகத்தில் அநாகரீக அரசியலை தொடங்கி வைத்தவர் கருணாநிதி.
7.காமராஜரை எருமை தோலன், அண்டங்காக்காய் என்று அழைத்தவர் கருணாநிதி.
8.காமராஜர் வசித்த வாடகை வீட்டை “ஏழைப்பங்காளன் எழில்மாளிகையை பாரீர்” என்று நோட்டீஸ் அடித்து அவதூறு பரப்பியவர் கருணாநிதி.
9.அப்பழுக்கற்ற அரசியல்வாதி தோழர் ஜீவானந்தத்தை “செவிடன் ஜீவா” என்று அழைத்தவர் கருணாநிதி.
10.காமராஜரின் முகத்தை குரங்கு போல தொடர்ந்து முரசொலியில் கார்ட்டூன் வரைந்தவர் கருணாநிதி.
11.மூதறிஞர் ராஜாஜியை ‘குல்லுக பட்டர்’ என்று கேலி பேசியவர் கருணாநிதி.
12.தீப்பொறிஆறுமுகம் ,வெற்றிகொண்டான் போன்ற நாலம்தர நரகல் பேச்சாளர்களை நட்சத்திர பேச்சாளர்கள் என்று அங்கீகரித்து தமிழகம் முழுக்க அனுப்பி அரசியல் மேடைகளை ஆபாச மேடைகளாக மாற்றியவர் கருணாநிதி.
13.தான் எழுதிய திரைப்படங்களில் கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தியவர் கருணாநிதி .”பெற்ற தாயை பெண்டாள நினைக்கும் சண்டாளா” இது மனோகரா படத்தில் ஒரு பெண் பேசுவது போல் இடம்பெற்ற வசனம் .
14.இரட்டை அர்த்த வசனங்களை ஆரம்பித்து வைத்தவர் கருணாநிதி .அவர் எழுதிய உளியின் ஓசை திரைப்படத்தை பார்த்தால் புரியும் .
15.கலாச்சார சீர்கேட்டை கதைகள் மூலம் பரப்பியவர் கருணாநிதி. அவர் எழுதிய “வாழமுடியாதவர்கள்” என்ற கதையில் தந்தைக்கும் மகளுக்குமே தவறான உறவு இருக்கும் .
16.திருக்குறளுக்கு உரை என்ற பெயரில் தன் சொந்த கருத்துக்களை திணித்து குறளை இழிவுபடுத்தியவர் கருணாநிதி.
17.திருவள்ளுவரை நாத்திகராக நா கூசாமல் திரித்து எழுதியவர் கருணாநிதி.
18.தனக்கும் தன் மகனுக்கும் போட்டியாளர்கள் என்று கருதி ,கட்சிக்கு பலவருடம் உழைத்தவர்கள் (எம்ஜிஆர், வைகோ) துரத்தியடித்தவர் கருணாநிதி.
19.கச்சத்தீவை தாரை வார்த்த போது சட்டரீதியாக தடுக்காமல்,பலநூறு மீனவர்கள் கடலில் செத்து மிதந்ததற்கு காரணம் கருணாநிதி.
20.மது வாசனை அறியாத தமிழகத்தில் முதல்முறையாக மதுக்கடைகளை திறந்தவர் கருணாநிதி.
21.ஒரே நேரத்தில் இரண்டு சபாநாயகர்களை நியமித்து சட்டப்பேரவையின் மாண்பைக் கெடுத்தவர் கருணாநிதி.
22.சட்டப்பேரவையில் அனாகரிகங்கள்,அடிதடிகள் முதலில் நடத்தியது கருணாநிதி.
23.சட்டப்பேரவையில் ஒரு பெண் என்றும் பாராமல் ஜெயலலிதாவை ஆட்கள் வைத்து தாக்கியவர் கருணாநிதி.
24.பொறுப்பான எதிர்க்கட்சியாக இல்லாமல் முதல்வன் படத்தில் வரும் ரகுவரன் போல, எம்ஜிஆர் ஆட்சிக்கு பெரிய தலைவலியாக இருந்தவர் கருணாநிதி. (இந்த ஜம்பம் ஜெயலலிதாவிடம் பலிக்கவில்லை)
25.தமிழகத்தில் கொள்கையற்ற, மானங்கெட்ட கூட்டணிகளை முதலில் அமைத்தவர் கருணாநிதி.
26.எமர்ஜென்சியின் போது ஸ்டாலின் வாயை உடைத்து ,முரசொலி மாறனின் முதுகை உடைத்து, ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்களை தூக்கிப்போட்டு வாயிலேயே மிதித்த இந்திரா காந்தியுடன் இரண்டே வருடத்தில் “நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக”என்று கூட்டணி சேர்ந்தவர் கருணாநிதி.
27.இந்திரா காந்தியுடன் சேர்ந்து 1980இல் எம்ஜிஆர் ஆட்சியை கலைத்து ஜனநாயகப் படுகொலை செய்தவர் கருணாநிதி .
28.1980இல் அண்ணாநகர் தொகுதியில் 700 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றதாக அறிவிக்கப்பட்டு ,பின்னர் எம்ஜிஆர் தலையீட்டால் 699 வாக்கு வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டவர் கருணாநிதி.
29.பால் கமிஷன் அறிக்கையை திருடி வெளியிட்டவர் கருணாநிதி.
30.பார் புகழும் எம்ஜிஆரின் சத்துணவு திட்டத்தை “பிச்சைக்கார திட்டம்” என்று தூற்றியவர் கருணாநிதி.
31.எம்ஜிஆர் உடல் நலமற்று இருக்கும் பொழுது அவர் உடல்நிலை பற்றி தன் கட்சிக்காரர்களை வைத்து அவதூறு பரப்பியவர் கருணாநிதி.
32.தனது குற்றங்களை ஒப்புக்கொண்டு மக்கள் முன் ‘என்னை தண்டித்தது போதாதா’ என்று கதறியவர் கருணாநிதி.
33.தமிழக வரலாற்றிலேயே மிகப்பெரிய உயிர் சேதத்தை ஏற்படுத்திய கொடூர நிகழ்வான கோவை குண்டுவெடிப்பு நடந்த பொழுது முதலமைச்சர் கருணாநிதி.
34.பொறுப்பற்ற விசாரணை மூலம் குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட பல உண்மையான குற்றவாளிகளை தப்ப விட்டவர் கருணாநிதி.
35. சாதிய சக்திகளை ஒன்றிணைத்து 2001இல் சாதிக் கூட்டணி அமைத்தவர் கருணாநிதி.
36. சாதிய சக்திகளை வளர்த்து விட்டு பின்பு இது சாதிக் கூட்டணி அல்ல சாதிக்கும் கூட்டணி என்று சப்பைக் கட்டு கட்டியவர் கருணாநிதி.
37. சிங்கங்கள் உலாவலாம் சிறுத்தைகள் உலவ கூடாதா என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி ஜாதிய வன்மத்தை தூண்டியவர் கருணாநிதி .
38. சாதி அடிப்படையில் தேர்தல் சீட்டுக்களை முதலில் வழங்கியவர் கருணாநிதி .
39.கோவை கலவரத்தில் 19 இஸ்லாமியர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட போது முதலமைச்சர் கருணாநிதி.
40.கோயம்பேடு பேருந்து நிலையம், மார்க்கெட் போன்றவற்றை அமைக்கும் திட்டத்தை சட்டசபையில் அறிவித்து, அதற்கான திட்ட வரைவை தயாரித்தவர் எம்ஜிஆர். ஆனால் அவரது பெயரை இருட்டடிப்பு செய்தவர் கருணாநிதி.
41.குமரிமுனையில் வள்ளுவருக்கு சிலை அமைப்பதற்கான பணிகளை தொடங்கி அடிக்கல் நாட்டு விழா நடத்தியவர் எம்ஜிஆர். (இன்றும் அந்தக் கல்வெட்டு அங்கு உள்ளது) ஆனால், அதிலும் எம்ஜிஆர் பெயரை இருட்டடிப்பு செய்தவர் கருணாநிதி.
42.திமுக உறுப்பினர்களின் காசிலும், வியர்வையிலும் உருவான அண்ணா அறிவாலய கட்டிடத்தை தனது பேரனின் சன் டிவி அலுவலகமாக மாற்றியவர் கலைஞர் .(இப்போது அதில் கலைஞர்டிவி இயங்குகிறது)
43.மூன்றாவது அணி,காங்கிரஸ்,பாஜக என்று எந்த ஆட்சி மத்தியில் இருந்தாலும் அவர்களோடு பதவிக்காக கூட்டணி சேர்ந்தவர் கருணாநிதி .
44.பெரியாரிய கொள்கைகளுக்கு முரணாக பதவிக்காக பாஜகவோடு கூட்டணி வைத்தவர் கருணாநிதி.
45.குஜராத் கலவரத்தின் போது ‘அது அந்த மாநில பிரச்சனை’ என்று சொன்னவர் கருணாநிதி.
46. 17 ஆண்டுகள் தொடர்ச்சியாக மத்திய அரசின் அங்கம் வகித்தும் அதன்மூலம் தமிழகத்திற்கு ஒரு நன்மையும் செய்யாதவர் கருணாநிதி.
47.இலவசம்,மானியம்,தள்ளுபடி இதை மட்டுமே வைத்து ஆட்சி நடத்தியவர் கருணாநிதி .
48.அரசு கஜானாவிற்கு வருமானம் வரக்கூடிய வகையில் எந்த திட்டத்தையும் செயல்படுத்தாதவர் கருணாநிதி.
49.பணிநிரந்தரம் ,பல சலுகைகள் என்று சுகமாய் வாழும் அரசு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக சம்பளத்தை உயர்த்திக் கொண்டே இருந்தவர் கருணாநிதி.
50.முறையற்ற போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்கும் ஆளுமைற்றவர் கருணாநிதி.
51.செய்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்காமல் “இதுதான் எனக்கு கடைசி தேர்தல், அதனால் எனக்கு ஓட்டு போடுங்கள்” என்று விசித்திரமாக ஓட்டு கேட்டவர் கருணாநிதி.
2006 – 2011 திமுக ஆட்சி சிறப்பு தொகுப்பு :
52.எடப்பாடியின் ஆட்சியை மத்திய அரசின் தயவில் இருந்த அடிமை ஆட்சி என்று திமுகவினர் தூற்றுகின்றனர். உண்மையில், மோடியே நினைத்தாலும் எடப்பாடியை அசைத்திருக்க முடியாது! ஏனெனில் மெஜாரிட்டிக்கு தேவையான எம்எல்ஏக்கள் எடப்பாடியிடம் இருந்தனர். ஆனால், வெறும் 92 எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டு காங்கிரஸ் தயவில் 5 ஆண்டுகாலம் மைனாரிட்டி ஆட்சியாக சோனியாவின் அடிமையாகவும் எடுபிடியாகவும் இருந்து ஆட்சி நடத்தியவர் கருணாநிதி.
53.திமுகவை சமூக விரோதிகளின் கூடாரமாக மாற்றியவர் கருணாநிதி.
54.தனது ஆட்சியில் கட்டப்பஞ்சாயத்து, நில அபகரிப்பு, ரவுடியிசம் போன்றவற்றை உச்சம் தொட வைத்தவர் கருணாநிதி.
55.தன்னைப்போலவே ஒவ்வொரு மாவட்டத்திலும் தனது கட்சியினரை குறுநில மன்னர்களாக செயல்பட வைத்தவர் கருணாநிதி.
56.தனது கட்சியினர் எவ்வளவு பெரிய தவறு செய்தாலும் கண்டுகொள்ளாமலும், காப்பாற்றியும் விட்டவர் கருணாநிதி.
57.ஒட்டுமொத்த சினிமா துறையையும் தனது குடும்ப உறுப்பினர்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தவர் கருணாநிதி.
58.பல முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களை போண்டி ஆக்கியவர் கருணாநிதி.
59.நடிகர்களை மிரட்டி அழைத்து பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா என்று தனக்குத்தானே நடத்திக் கொண்டவர் கருணாநிதி .
60.அதே மேடையில் இந்த காரணத்திற்காக அஜீத் குமாரிடம் அசிங்கப்பட்டவர் கருணாநிதி.
61.முதலமைச்சராக இருந்து கொண்டு திரைப்படங்களுக்கு கதை வசனம் (5 படங்கள்) எழுதுவதில் கவனம் செலுத்தியவர் கருணாநிதி.
62.மானாட மயிலாட போன்ற மட்டமான நிகழ்ச்சிகளில் முதல்வராக கலந்துகொண்டவர் கருணாநிதி.
63.தனது வாரிசுகள் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் இடம்பிடிக்க உதவியவர் கருணாநிதி .
64.ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு அனுமதி அளித்தவர் கருணாநிதி .
65.மீத்தேன் திட்டத்திற்கு தமிழகத்தில் அனுமதி அளித்தவர் கருணாநிதி.
66.ஈழத்தில் போரை தடுக்க எந்த முயற்சியும் செய்யாதவர் கருணாநிதி.
67.கொத்துக்கொத்தாய் மக்கள் சாகும்போது பதவியை இறுகப்பிடித்துக்கொண்டு இருந்தவர் கருணாநிதி.
68.ஈழப் போரை தடுக்க போராடியவர்களை சிறையில் தள்ளியவர் கருணாநிதி.
69.நிவாரணப் பொருட்கள் ஏற்றி வந்த “வணங்காமண்” கப்பலை துறைமுகத்தை விட்டு வெளியேற அனுமதிக்காதவர் கருணாநிதி.
70.தமிழகத்திலிருந்து செல்வதற்கு தயாராக இருந்த நிவாரண பொருட்களை வீணடித்தவர் கருணாநிதி.
71.மற்ற கட்சிகள் ஈழப் போருக்கு எதிராக குரல் கொடுத்தபோது அவர்கள் குரல்வளையை நெறித்தவர் கருணாநிதி.
72.உலகையே புரட்டிப்போட்ட போராட்டமான, மூன்று மணி நேர உண்ணாவிரதம் இருந்தவர் கருணாநிதி.
71.ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட பாமகவை 2009ஆம் தேர்வு ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட அத்தனை தொகுதிகளிலும் பணத்தை கொட்டி தோல்வியடைய செய்தவர் கருணாநிதி.
74.அதே தேர்தலில் வைகோவை மாணிக் தாகூர் என்ற அட்ரஸ் இல்லாத காங்கிரஸ்காரரை வைத்து அவர் சொந்தத் தொகுதியிலேயே தோற்கடித்தவர் கருணாநிதி.
75.ஈழ ஆதரவாளர் சீமானை ஐந்து முறை சிறைப்படுத்தியவர் கருணாநிதி.
76.மோசமான உடல்நிலையில் சுயநினைவற்று இந்தியாவிற்கு சிகிச்சைக்கு வந்த பார்வதியம்மாளை விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பியவர் கருணாநிதி.
77.ஈழத்தில் ரத்தமும் கண்ணீரும் காயாத போது அதை திசை திருப்ப செம்மொழி மாநாடு நடத்தியவர் கருணாநிதி.
78.மக்கள் பணம் 450 கோடியில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டை தனது குடும்ப மாநாடாக நடத்தியவர் கருணாநிதி.
79.”ஈழம் முழுக்க சுடுகாடு! எதற்கு செம்மொழி மாநாடு?” என்று கேட்டவர்களை கரித்து கொட்டியவர் கருணாநிதி
.
80.மீத்தேன் திட்டத்திற்கு துணை முதலமைச்சர் ஸ்டாலின் கையெழுத்திடும் போது முதலமைச்சராக இருந்தவர் கருணாநிதி.
81.ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஆட்சியில் இருக்கும்போது எதிர்க்காமல் மௌனம் காத்தவர் கருணாநிதி.
82. 2013இல் காங்கிரஸ் அரசு நீட் தேர்வை கொண்டுவந்தபோது எதிர்க்காமல் இருந்தவர் கருணாநிதி.
83.காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மத்திய அரசில் அங்கம் வகித்துக் கொண்டு கெஜட்டில் வெளியிடாமல் தடுத்தவர் கருணாநிதி.
84.தந்தை முதலமைச்சர் ,மகன் துணை முதலமைச்சர்,இன்னொரு மகன் ,மற்றும் பேரன் மத்திய அமைச்சர்கள், மகள் எம்பி என்று மன்னர் ஆட்சிக் காலத்தில் கூட இல்லாத அட்டூழியம் செய்தவர் கருணாநிதி.
85.மத்திய அரசுக்கு அஞ்சி முல்லைப்பெரியாறு போராட்டத்தை கைவிட்டவர் கருணாநிதி .
86.காங்கிரஸ் ஆட்சியில் ஜல்லிக்கட்டை தடை செய்த பொழுது கூட்டணியில் இருந்து கொண்டு அதை தடுக்காமல் இருந்தவர் கருணாநிதி.
87.மாடியில் சிபிஐ ரெய்டு, கீழே கூட்டணி பேச்சுவார்த்தை என்று அடிமைப்பட்டு அசிங்கப்பட்டவர் கருணாநிதி.
88.மோசமான நிர்வாகத்தால் தமிழ்நாடு மின்சார வாரியத்தை கடனிலும், தமிழகத்தை இருளிலும் தள்ளியவர் கருணாநிதி.
89.வரலாறு காணாத மின்வெட்டால் பல்லாயிரம் தொழில்நிறுவனங்கள் மூடுவதற்கு காரணமாயிருந்தவர் கருணாநிதி.
90.ரவுடிகளையும்,குண்டர்களையும் வைத்து உள்ளாட்சித் தேர்தலை வரலாறு காணாத வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு முறைகேடாக நடத்தி, பின்பு உயர்நீதிமன்றத்தின் கடும் கண்டனத்துக்கு ஆளானவர் கருணாநிதி.
91.TAMIN என்கிற அரசு கனிமவள நிறுவனத்தை செயலற்றதாக்கியவர் கருணாநிதி.
92.K.C பழனிசாமி, PRP போன்ற மணல், கனிமவள கொள்ளை மாபியாக்களை உருவாக்கியவர் கருணாநிதி.
93.தனது ஆட்சியில் மணல் மற்றும் கனிம வளக் கொள்ளையில் புதிய உச்சம் தொட்டவர் கருணாநிதி.
94.தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத்தை அடக்கம் செய்தவர் கருணாநிதி.
95. டிவி போன்ற அனாவசிய இலவசங்களை கொடுத்து வாக்கு சேகரிக்கும் கேடான அரசியலை தொடங்கியவர் கருணாநிதி.
96.திருமங்கலம் பார்முலா உருவாக்கியவர் கருணாநிதி.
97.டாஸ்மாக் வருமானத்தை தனது ஆட்சியில் இரண்டு மடங்காக உயர்த்தியவர் கருணாநிதி.
98.சகட்டுமேனிக்கு டாஸ்மாக் கடைகளை திறந்து குடிப்பழக்கம் உள்ள தமிழக மக்களை குடி நோயாளிகளாக மாற்றியவர் கருணாநிதி.
99.தனது கட்சியினர்,மற்றும் பினாமிகளை வைத்து எண்ணற்ற மது ஆலைகளை தொடங்கியவர் கருணாநிதி.
100.தேவையற்ற அரசு பணியிடங்களை ஆயிரக்கணக்கில் ஏற்படுத்தி (சாலைப் பணியாளர் போன்ற)அரசுக்கு பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தியவர் கருணாநிதி.
101.கள்ள லாட்டரி மார்ட்டின் திரைப்படம் தயாரிக்க, அதற்கு கதை வசனம் எழுதியவர் முதலமைச்சர் கருணாநிதி.
102.சினிமா ,தொலைக்காட்சி, கேபிள் போன்ற அனைத்தையும் தனது குடும்ப உறுப்பினர்கள் மூலம் ஆக்டோபஸ் போல வளைத்தவர் கருணாநிதி.
103.L.கணேசன், கண்ணப்பன் போன்றவர்களை வைத்து வைகோவின் மதிமுக வை உடைத்தவர் கருணாநிதி.
104.கேப்டன் விஜயகாந்தின் தேமுதிக வை உடைத்து “மக்கள் தேமுதிக” உருவாக்கியவர் கருணாநிதி.
105.நீண்ட போராட்ட வரலாறு கொண்ட வைகோவின் அரசியல் வாழ்க்கையை நிர்மூலமாக்கியவர் கருணாநிதி.
106.பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களை திமுகவினர் அபகரிக்க காரணமாய் இருந்தவர் கருணாநிதி.
107.92 வயதிலும் முதலமைச்சராக ஆசைப்பட்டவர் கருணாநிதி.
108.இந்து மதத்தை மட்டும் தொடர்ச்சியாக இழிவு படுத்தியவர் கருணாநிதி.
109.மாற்று மத கூட்டங்களில் கலந்துகொண்டு இந்து என்றால் திருடன் என்று சொல்லி மத துவேசத்தை வளர்த்தவர் கருணாநிதி.
110.மதச்சார்பற்ற நாட்டில் மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கியவர் கருணாநிதி.
111.தமிழரான மூப்பனார் பிரதமராவதை கெடுத்தவர் கருணாநிதி.
112.ஐயா அப்துல்கலாம் இரண்டாவது முறையாக ஜனாதிபதி ஆவதை தடுத்தவர் கருணாநிதி .
113.ஐயா அப்துல் கலாமை ‘கலாம் என்றால் கலகம்’ என்று கீழ்த்தரமாக விமர்சித்தவர் கருணாநிதி.
114.எந்த கேள்விக்கும் நேரடியாக பதில் சொல்லாமல் எதுகை மோனையாக பேசி ஏமாற்றியவர் கருணாநிதி.
115.திமுகவின் அடிமட்ட தொண்டர்களை கொத்தடிமைகளாக மாற்றியவர் கருணாநிதி.
116.தேசப்பற்று, நாட்டின் ஒருமைப்பாடு இதைப்பற்றியெல்லாம் தன் வாழ்நாளில் ஒரு வார்த்தை கூட பேசாதவர் கருணாநிதி.
117.ஒரு பெரும் பொறுப்பில் இருந்துகொண்டு அறம் சார்ந்து வாழாமல் ஒரே நேரத்தில் இரண்டு மனைவிகளோடு சட்டவிரோதமாக வாழ்ந்தவர் கருணாநிதி.
118.உட்கட்சி ஜனநாயகத்தை கொலைசெய்து தனக்குப் பின்னால் தன் மகன்தான் தலைவர் என்று வெளிப்படையாக அறிவித்தவர் கருணாநிதி.
119.தனது அரசியல் வாரிசுகளான ஸ்டாலின்,உதயநிதி போன்றவர்களை எந்தவித அரசியல் அறிவும், புரிதலும் இன்றி “தத்தி”களாகவே வளர்த்தவர் கருணாநிதி.
கருணாநிதி எந்த நன்மையும் செய்யவில்லையா என்று கேட்டால் அவர் ஆட்சியில் ஒரு சில நல்ல திட்டங்களை அமல்படுத்தினார் என்பது உண்மை! ஆனால்.. அவரும் ,அவரது கட்சியினரும் செய்த அட்டூழியங்களும் ஏற்படுத்திய மோசமான முன்னுதாரணங்களும் அதைவிட அதிகம்!
நீங்கள் எந்தக் கட்சியும் சாராத ஒரு பொதுஜனமா..? திமுக ஆட்சி , திமுக கட்சிகாரன் என்று சொன்னாலே உங்கள் அடி மனதில் ஒரு இனம்புரியாத பயம் தோன்றுவதை தவிர்க்க முடியாது.
கருணாநிதி காலத்தில் இருந்ததைவிட திமுகவில் உள்ள சமூக விரோதிகளும், குண்டர்களும் ஸ்டாலின் தலைமையில் தற்போது மிகப்பெரிய பலம் பெற்றுள்ளனர்.
அவர்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் ஸ்டாலினுக்கு இல்லை.
தற்போது மீண்டும் பொறுப்பேற்றுள்ள திமுக பெருந்தொற்று காலமாக இருப்பதால் அடக்கி வாசிக்கிறது. எல்லாம் சரியான பின்னர் மீண்டும் கருணாநிதி ஆட்சியை ஏற்படுத்தி அவர்கள் தங்கள் கோரமுகத்தை தமிழகத்திற்கு காட்டுவார்கள்.
Discussion about this post