வெப்பச்சலனம் மற்றும் தெலுங்கானா முதல் தென் தமிழகம் வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை அறிக்கை:
இன்று (ஜூன் 3) மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், விருதுநகர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் ஏனைய மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
04.06.2021 அன்று தேனி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, சேலம், கிருஷ்ணகிரி, தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 05.06.2021 அன்று டெல்டா மாவட்டங்கள் மற்றும் சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
06.06.2021 மற்றும் 07.06.2021 அன்று மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும் ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்ஸியஸை ஒட்டி இருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்ஸியஸை ஓட்டி இருக்கும். தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாவலூர் 12 செமீ, பாடாலூர் 7செமீ, புதுச்சத்திரம், சோலையாறு, ஆத்தூர் தலா 5 செமீ, திண்டுக்கல், குமாரபாளையம் தலா 4 செமீ, ஸ்ரீவில்லிபுத்தூர், திருச்சி விமான நிலையம் தலா 3 செமீ, நடுவட்டம், பவானி, சேரன்மகாதேவி, ஒகேனக்கல், உதகமண்டலம் தலா 2 செமீ, தோகைமலை, விராலிமலை, போடிநாயக்கனூர் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.
இன்று(ஜூன் 3) குமரி!க்கடல் மற்றும் இலங்கையின் தெற்கு கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த பகுதிக்கு எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று(ஜூன் 3) முதல் 05.06.2021 வரை தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுகுதிகளில் மற்றும் கேரளா கடலோர பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். எனவே இந்த பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post