ஆம், ஜெகத்கஸ்பர் எனும் பாதிரி சர்ச்சில் திருப்பலி வைப்பதை தவிர எல்லா இந்திய பிரிவினைகளுக்கும் கொடிபிடிப்பவர் என்பது உலகறிந்தது
புலிகளின் மிக நெருங்கிய நண்பரான இவர் முன்பு பிலிப்பைன்ஸில் சர்ச்சைகுரிய வானொலியில் பணியாற்றியதும் பின் இலங்கைக்கு சென்று புலிகளோடு பழகியதும் பின்னாளில் லண்டனிலும் தமிழகத்திலும் புலிகளின் அறிவிக்கபடாத பினாமியாக சுற்றிவந்ததும் எல்லோரும் அறிந்தது
அன்னார் கனிமொழி முகாமில் மகா முக்கிய புள்ளி என்பது உலகறிந்தது
அன்னாரின் புலி ரகசியங்களையும், 2006ல் புலிகளை அமெரிக்கா தடை செய்தபொழுது பொழுது வெளியிடபட்ட ஆவணங்களையும் இப்பொழுது வெளியிடுகின்றார் சுவாமி
இதுகாலமும் மத்திய அரசு இதுபற்றி ஏன் வாய்திறக்கவில்லை என்றால் இதெல்லாம் சர்வதேச விவகாரங்கள், சில நாடுகளின் அனுமதியில்லாமல் பல விஷயம் சாத்தியமில்லை
இப்பொழுது எங்கோ அனுமதி கிடைத்துவிட்டது, ஜெகத் கஸ்பரை டெல்லி மேலிடம் குறிவைத்தாயிற்று, சாமி சரியாக அம்பை வீசிவிட்டார்
புலி பாதிரி, புலி தந்தை கெஸ்பருக்கு இனி போதாத காலம், விஷயம் எங்கெல்லாமோ சுற்ற தொடங்கிவிட்டது
சரி, இவ்வளவு காலமும் இல்லா சிக்கல் இப்பொழுது கஸ்பர்மேல் ஏன் விழுகின்றது என்றால் சுவாமியினை களத்துக்கு இழுத்து வந்த அந்த சேஷாத்திரி பள்ளிக்கும் பாதிரிக்கும் ஏதோ வில்லங்கம் என்பது மட்டும் புரிகின்றது
ஆக
“பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவே, அந்த புலிபாதிரியினை மன்னிக்காதேயும், இந்திய திருநாட்டை குழப்ப வந்து தமிழக மக்களிடம் பிரிவினையினை வளர்க்கும் அந்த புலிதந்தையின் தோலை சுப்பிரமணியன் சாமி எனும் இறைவாக்கினர் வழியாக நீர் உரித்ததற்கு கோடான கோடி நன்றி தகப்பனே
கோட்டான கோடி நன்றி…”
Discussion about this post