யாஸ் புயல் எதிரொலியால் கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் அதி தீவிரப் புயலாக வலுப்பெற்ற யாஸ் புயல்,தற்போது ஒடிசா-மேற்கு வங்கம் இடையே இன்று காலை 9 மணியிலிருந்து கரையைக் கடக்க தொடங்கியது. தற்போது அது முழுவதுமாக கரையை கடந்து முடித்துள்ளது. அந்த புயல் தற்போது பாலசோர் என்ற இடத்தில் மையம் கொண்டுள்ளது மெதுவாக வடக்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வலுவிழந்து தீவிர புயலாக மாறும் என்றும் அதற்கு பிறகு புயலாக மாறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனுடைய தாக்கம் காரணமாக வட தமிழகத்தில் 40 கிலோ மீட்டர் வேகம் வரை காற்று வீச வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் யாஸ் புயல் எதிரொலியால், கடந்த இரண்டு நாட்களாக கன்னியாகுமரியில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் இரன்டு கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை வருவதால் மழைநீர் வீட்டிற்குள் புகுந்துள்ளது. கனமழை காரணமாக கன்னியாகுமாரி மாவட்டம் வெள்ளக்காட்சியாக காணப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் வெப்பச்சலனம் காரணமாக தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை, நீலகிரி, ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கன மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
Discussion about this post