தமிழகத்தில் நடந்த தில்லுமுல்லுகளை சுட்டிக்காட்டி மத்திய சுகாதாரத்துறை மற்றும் ICMR தமிழக அரசை தலையில் குட்டியுள்ளது.
கொரானா பாதிக்கப்பட்ட நோயாளிகளோ கல்கத்தா..ஆனால் கணக்கு காட்டியிருப்பது தமிழகத்தில்.மிரண்டு போன ICMR மத்திய சுகாதாரத்துறையிடம் தகவலை பரிமாற..மத்திய அரசு தமிழக அரசிற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.சுதாரித்துக் கொண்ட தமிழக சுகாதாரத்துறை சம்மந்தப்பட்ட ஆய்வகத்திற்க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னையை தலைமையிடமாக கொண்டு தமிழகம் முமுவதும் செயல்பட்டு வருகிறது Medall ஆய்வகம்.இது அங்கீகரிக்கப்பட்ட கொரானா டெஸ்ட் சென்டர் ஆகும்.கடந்த சில தினங்களுக்கு முன்பு கள்ளக்குறிச்சியில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனத்தின் கிளை ஆய்வகம் மே 19 மற்றும் 20 ல் கொரானா நெகட்டிவ் என முடிவு வந்த
நாலாயிரம் மாதிரிகளை பாசிட்டிவ் என ICMRல் பதிவு செய்தது.ICMRல் மாதிரிகளை ஆய்வு செய்வது வழக்கமான ஒன்று. அப்படி ஒப்பிட்டு பார்க்கையில் பதிவு செய்யப்பட்ட மாதிரிகள் அனைத்தும் கல்கத்தா நோயாளிகளின் மாதிரிகள் என கண்டறிந்த ICMR அரண்டு போனது.மத்திய சுகாதாரத்துறைக்கு தகவலை உடனடியாக பரிமாறியது.மத்திய சுகாதாரத்துறை உடனடியாக களத்தில் இறங்கியது. தாமதிக்காமல் சம்பந்தப்பட்டMedall ஆய்வகத்தின் மேல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியது.
விழித்துக் கொண்ட தமிழக சுகாதாரத்துறை அந்த ஆய்வக உரிமையை ரத்து செய்துள்ளது..ஏற்கனவே நோயாளிகளின் விபரங்கள் சரியாக ஆவணப்படுத்தப்படுவதில்லை என மத்திய அரசு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தவறான தகவல்களை பரிமாறுவதால் மத்திய அரசு ஆக்சிசன் வென்டிலேட்டர்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை ஒதுக்கீடு செய்வதில் பெரும் குழப்பம் ஏற்படுத்தப்படுகிறது..தமிழகத்தில் உள்ள சில ஆய்வகங்களுக்கும் தனியார் மருத்துவமனைகளுக்கும் மறைமுக தொடர்பு இருப்பதாக மக்கள் கொந்தளிப்பது குறிப்பிடத்தக்கது.
அதிலும் சில பெரிய மருத்துவமனைகள் திமுக பிரமுகர்களுக்கு சொந்தமானது.
இதுவரை தமிழகத்திற்கு கொடுக்கப்பட்ட
தடுப்பூசிகளின் எண்ணிக்கை 86,55,010.
தமிழக அரசின் தற்போதைய கையிருப்பு13,63,494.
மே31 க்குள் மத்திய அரசால் கொடுக்கவிருக்கும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை5,89,850 ஆகும்.
தமிழக அரசின் குளறுபடியால் பலி எண்ணிக்கை மற்றும் தொற்று எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது.
திமுக இன்னமும் தங்களை எதிர்கட்சி என நினைக்காமல் ஆளும்கட்சி என உணரவேண்டும் என மக்கள் கருதுகின்றனர்.மக்களை காக்க மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என பலரும் கருத்துகளை தெரிவிக்கின்றனர்.
Discussion about this post