அதிமுக சார்பில் ரூ. 1 கோடி கொரோனா நிவாரண நிதிக்கும் வழங்கப்படும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது..
கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழகத்திற்கு தாராளமாக நிதியுதவி வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து திரைப் பிரபலங்கள், தொழிலதிபர்கள், அரசியல் தலைவர்கள் என பல தரப்பினரும் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக சார்பில் ரூ. 1 கோடி கொரோனா நிவாரண நிதிக்கும் வழங்கப்படும் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளனர். மேலும் அதிமுகவின் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒரு மாத ஊதியம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்..
கட்சி தொண்டர்கள், நிர்வாகளும் உதவ முன்வர வேண்டும் என்றும் அதிமுக தலைமை வலியுறுத்தியுள்ளது..
Discussion about this post