அரபிக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ” தென்கிழக்கு அரபிக்க்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும்..
இதன் காரணமாக இன்று முதல் மே 17 வரை தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, ராமநாதபுரம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிக அதிக கனமழை பெய்யக்கூடும்.
குமரிக்கடல், தென்கிழக்கு அரபிக்கடல், தென் மேற்கு அரபிக் கடல், லட்சத்தீவு, மாலத்தீவு ஆகிய பகுதிகளில் இன்று முதல் 4 நாட்களுக்கு மணிக்கு 40 முதல் 65 கி.மீ வரை சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது..
இந்நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் லட்சத்தீவில் அதிக முதல் மிக அதிக மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே 16 வரை கேரளா மற்றும் தமிழ்நாடு மிக அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரளாவின் 3 மாவட்டங்கள் மற்றும் லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் பதனம்திட்டா ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதே போல் எர்ணாகுளம், கோட்டயம், ஆலப்புழா மற்றும் இடுக்கி ஆகிய ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post