கூடுதலாக மதுபாட்டில் வாங்கிச்சென்றவர்களை விடுவிக்காத காரணத்தினால் தி.மு.க’வினர் புகாரில், பெண் எஸ்.ஐ இட மாற்றப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
சேலம் மாவட்டம், ஆத்துார், மல்லியக்கரை போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ மலர்விழி, இவர் ஊரடங்கிற்கு முன தி.மு.க’வை சேர்ந்த சிலர் கூடுதல் மதுபாட்டில் களுடன் பைக், மொபட்டில் சென்றபோது, அவர்களை பிடித்துள்ளார்.
பிடித்த சிறிது தேரத்தில் உள்ளூர் தி.மு.க நிர்வாகிகள் சிலர் எஸ்.ஐ மலர்விழியிடம், ‘பெரிதாக கடத்துபவர்களை விட்டு விடுகிறீர்கள்; ஊரடங்கால் மதுபாட்டில் வாங்குபவர் ளை பிடிக்கிறீர்கள்” என கேட்டு வாக்குவாதம் செய்துள்ளனர்.
தி.மு.க’வின் ஆத்தூர் ஒன்றிய செயலர் செழியன், எஸ்.ஐ.,யை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, மதுபாட்டில் வாங்கிச்சென்றவர்களை விடுவிக்க அறிவுறுத்தினார்.
இந்நிலையில், மல்லியக்கரையில் இருந்து, ஆத்தூர் மகளிர் போலீஸ் ஸ்டேனுக்கு எஸ்.ஐ மாற்றப்பட்டார். இதுகுறித்து, ஆத்துார் டி.எஸ்.பி..யிடம் நடந்த விபரத்தை கூறி, எஸ்.ஐ கண்ணீர் விட்டுள்ளார். இதுகுறித்து, டி.எஸ்.பி விசாரிப்பதாக கூறியுள்ளார்.
ஒன்றிய செயலர் செழியன் கூறுகையில், “எஸ்.ஐ.,யிடம், அதிகளவில் பதுக்கும் நபர்களை கைது செய்யுங்கள்; மற்றவர்கள் மீது நடவடிக்கையை தவிருங்கள் என்றேன். அவர் மீது, எஸ்.பி’க்கு யாரோ புகார் செய்ததால் தான், நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறினார்கள்,” என்றார்.
Facebook Comments Box