சென்னையிலிருந்து காட்பாடி நோக்கி சென்ற மின்சார ரயில் அரக்கோணம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
மொத்தம் 9 பெட்டிகளை கொண்ட இந்த ரயில் சித்தேரி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டதும், அதில் உள்ள மூன்றாவது பெட்டி தண்டவாளத்தை விட்டு விலகியதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் எந்தவிதமான உயிர் இழப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
தண்டவாளம் முறிந்ததை கவனித்த ரயில் ஓட்டுநர் ரயிலை திறமையாக நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஓட்டுநரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், அதிகாரிகள் தண்டவாளத்தை பரிசோதனை செய்து வருகின்றனர்.
இந்த விபத்தினால் காட்பாடி நோக்கி செல்லும் அனைத்து ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, சில ரயில்கள் இடையிலேயே நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.