நியாயவிலைக் கடைகளை ஒரே துறையின் கீழ் இணைக்க வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

அனைத்து நியாயவிலைக் கடைகளை ஒரே துறையின் கீழ் இணைக்க வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுவினியோகத் திட்டத்தில் செயல்படும் அனைத்து நியாயவிலைக் கடைகளின் ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியான ஊதியம் வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். இதற்காக அனைத்து ரேஷன் கடைகளையும் ஒரே நிர்வாகத் துறையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பது ரேஷன் கடை பணியாளர்கள் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பான பல மனுக்கள் அரசுக்கு அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறிய அவர், ஊதிய வேறுபாடுகளை நீக்கும் வகையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Facebook Comments Box