தமிழகத்தில் கடந்த ஆறு மாதங்களாக 2.80 லட்சம் பேர் நாய்களால் கடிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 18 பேருக்கு ரேபிஸ் (நாய்க்கடி) வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. தெரு நாய்கள் மற்றும் செல்லப்பிராணிகள் கடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மனிதர்களையும், செல்லப்பிராணிகளையும் ரேபிஸ் தொற்றிலிருந்து பாதுகாக்க தடுப்பூசி கிடைக்கிறது.

ஆனால் தெருவில் உள்ள நாய்கள் மற்றும் சில வளர்ப்புப் பிராணிகளுக்கு தடுப்பூசி சரியாக செலுத்தப்படாததால், நாய்க்கடிக்கு உள்ளானவர்கள் ரேபிஸ் தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த ஆண்டு மட்டும் 4.80 லட்சம் பேர் நாய்க்கடிக்கு உள்ளாகி, 40 பேர் ரேபிஸ் காரணமாக உயிரிழந்தனர்.

இந்த ஆண்டில் மட்டும், கடந்த 6 மாதங்களில் 2.80 லட்சம் பேர் நாய்களால் கடிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் சிகிச்சையை தாமதமாக பெறுவதால், உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது: “தமிழகத்தில் ஆண்டுதோறும் நாய்களால் லட்சக்கணக்கானோர் கடிக்கப்படுகிறார்கள். ஆனால், ஒவ்வொருவருக்கும் ரேபிஸ் ஏற்படுவதில்லை. ரேபிஸ் வைரஸ் பாதித்த நாய், ஆடு, மாடு, குதிரை, குரங்கு, பூனை, வவ்வால் போன்ற விலங்குகள் கடித்தால் மட்டுமே தொற்று ஏற்படும். எந்த விலங்கு கடித்தாலும் உடனடியாக சிகிச்சை பெற வேண்டும். இதற்கான சிகிச்சை அரசு மருத்துவமனைகளில் உள்ளமைக்கப்பட்டுள்ளது” என்றனர்.

Facebook Comments Box