திருப்பரங்குன்றம் தொடர்பான வழக்கில் முன்னதாக இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியதால், மூன்றாவது நீதிபதி மூலம் விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், இந்த வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி ஆர். விஜயகுமார் நியமிக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு நேற்று நீதிபதி ஆர். விஜயகுமாரின் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர், “முந்தைய இரு நீதிபதிகளும் ஒரே மாதிரியான உத்தரவு வழங்கிய மனுக்கள் மற்றும் ஒத்த கோரிக்கைகளுடன் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இந்த விசாரணைக்குட்படுவதில்லை. அவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட சோலைக்கண்ணன், ராமலிங்கம், பரமசிவம், ஒசீர்கான் ஆகியோரின் மனுக்கள் மட்டுமே இந்த விசாரணையில் எடுத்துக்கொள்ளப்படும்” என தெரிவித்தார்.
இதையடுத்து, வழக்கு விசாரணை ஜூலை 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.