அரசுப் பணிக்கான ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் பணியாற்றும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கான ஊதியத்தில் 5 சதவீத உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, மாநில ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட இயக்குநரகத்திலிருந்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் புரோகிராமர்கள், சிவில் பொறியாளர்கள், கணக்கு மற்றும் தணிக்கை மேலாளர்கள், எம்ஐஎஸ் ஒருங்கிணைப்பாளர்கள், எஸ்எம்சி கணக்காளர்கள், தரவு பதிவாளர்கள், அலுவலக உதவியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆகியோருக்கு 5% ஊதிய உயர்வு வழங்கப்படும்.

இந்த ஊதிய உயர்வு 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் அமலில் வரும். மேலும், அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்று ஆலோசகர் அல்லது உதவியாளர் பணியில் உள்ளவர்களுக்கு இவ்வுயர்வு பொருந்தாது என்றும், ஊதிய உயர்வை பெற குறைந்தபட்சம் ஒரு வருட பணிச் சேவை அவசியமாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Facebook Comments Box