டிஜிபிக்கு பணிக்கால நீட்டிப்பு வழங்க தடை கோரி வழக்கு தொடரப்பட்டது
ராமநாதபுரம் ராஜவீதியைச் சேர்ந்த யாசர் அராபத் என்பவர், மதுரை உயர் நீதிமன்ற அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழக டிஜிபியாக உள்ள சங்கர் ஜிவால் வருகின்ற ஆகஸ்ட் 31-ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார். அவருக்குப் பிறகு அந்த பதவிக்கு தகுதியான ஐபிஎஸ் அதிகாரிகளின் பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையத்துக்கு மாநில அரசு இதுவரை அனுப்பவில்லை. தற்போது பணிபுரியும் டிஜிபிக்கு மீண்டும் பணிக்காலம் நீட்டிப்பு அளிக்கப்படும் என்பதும், அவரையே பொறுப்பு டிஜிபியாக நியமிக்கலாம் என்பதும் கூறப்படுகிறது.
இதனால், தற்போது பணிபுரியும் டிஜிபி சங்கர் ஜிவாலை ஓய்வு பெற்ற பிறகு பொறுப்பு டிஜிபியாக நியமிக்க கூடாது என்றும், அவரின் பணிக்காலத்தை நீட்டிக்கத் தடை விதிக்க வேண்டும் என்றும், மேலும் டிஜிபி பதவிக்குத் தகுதியான ஐபிஎஸ் அதிகாரிகள் பட்டியலை மாநில அரசு உடனடியாக தயார் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.