பாமக பொதுக்குழு கூட்டம்: ராமதாஸ் மற்றும் அன்புமணியிடையே போட்டி கூட்டங்கள் அறிவிப்பு

பாமக பொதுக்குழு கூட்டம்: ராமதாஸ் மற்றும் அன்புமணியிடையே போட்டி கூட்டங்கள் அறிவிப்பு

பாமக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பாமக நிறுவனரும் தலைவருமான டாக்டர் ராமதாஸ் அவர்களின் உத்தரவின்படி, திண்டிவனம் – புதுச்சேரி சாலையில் அமைந்துள்ள பட்டானூர் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதி காலை 10 மணிக்கு ஒரு விசேஷ பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது.

மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய மற்றும் நகரத் தலைமையிலுள்ள நிர்வாகிகள் அனைவரும் இந்த கூட்டத்தில் கட்டாயமாக கலந்து கொள்ளவேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பு தலைமை நிலையத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ராமதாஸ் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்துக்கு பதிலாக, பாமக தேசிய தலைவர் அன்புமணி ராமதாஸ் ஒருவகையில் போட்டியாகத் தனது கூட்டத்தை அறிவித்துள்ளார்.

அன்புமணி மற்றும் பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாமக பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 9ஆம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள கான்ப்ளுயன்ஸ் அரங்கில் நடைபெறுகிறது. பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம் உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments Box