சார்மினார் ரயில் டிசம்பர் 31 வரை கடற்கரையிலிருந்து இயக்கம் தொடரும்
எழும்பூர் ரயில் நிலையத்தில் நடந்து வரும் மறுசீரமைப்பு பணியின் காரணமாக, அங்கிருந்து இயக்கப்பட்டு வந்த ஆறு விரைவு ரயில்கள் தாம்பரத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, சார்மினார் விரைவு ரயிலும் கடற்கரை ரயில் நிலையத்துக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து இயக்கப்படத் தொடங்கியது. ஆரம்பத்தில், இந்த மாற்றம் ஆகஸ்ட் 18ஆம் தேதி வரை மட்டுமே என்றே அறிவிக்கப்பட்டது.
ஆனால், தற்போது இந்த மாற்றத்துக்குள் மாற்றம் ஏற்பட்டு, சார்மினார் விரைவு ரயில் இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து இயங்கும் என்று தெற்கு ரயில்வே அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
இருந்து, இந்த ரயில் மாலை 6.20 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புறப்படுகிறது. ஐதராபாத்திலிருந்து புறப்படும் சார்மினார் விரைவு ரயில், காலை 7.15 மணிக்கு சென்னை கடற்கரையை அடையும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.