மெட்ரோ ரயிலில் ஜூலை மாதத்தில் 1.03 கோடி பயணிகள் பயணம் – புதிய சாதனை
சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த ஜூலை மாதத்தில் மொத்தம் 1 கோடி 3 லட்சத்து 78 ஆயிரத்து 835 பயணிகள் பயணித்துள்ளனர். இது மெட்ரோ சேவை தொடங்கியதிலிருந்து இதுவரை பதிவான அதிகபட்ச பயணிக்கணக்காகும்.
இந்த தகவலை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். அவர்கள் கூறியதாவது:
சென்னை மெட்ரோ சேவை 10 ஆண்டு பயணத்தை கடந்துள்ள நிலையில், ஜூலை மாத பயணிகள் எண்ணிக்கை வரலாற்றிலேயே புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
அதே மாதத்தில் க்யூஆர் குறியீடு முறையின் மூலம் 45,66,058 பயணிகள் பயணித்திருக்கிறார்கள். பயண அட்டைகளை பயன்படுத்தியவர்கள் 6,55,991 பேர் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. சிங்கார சென்னை அட்டையின் வழியாக பயணித்தவர்கள் எண்ணிக்கை 51,56,786 ஆகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Facebook Comments Box