கருணாநிதி நினைவு தினம்: ஆகஸ்ட் 7-ஆம் தேதி திமுக அமைதிப் பேரணி

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 7வது ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதியான பேரணியாகச் சென்று நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தவுள்ளனர்.

அன்று காலை 7 மணிக்கு திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு, முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, துணைப் பொது செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளும் அமைதிப் பேரணி நடைபெறவுள்ளது.

இப்பேரணி, அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் அரசுத் தொகுதி வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலை அருகிலிருந்து தொடங்கப்படுகிறது. அதன் பின்னர், வாலாஜா சாலையைக் கடந்து, காமராஜர் சாலையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் சென்று, மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Facebook Comments Box