சென்னையிலிருந்து போத்தனூர், செங்கோட்டை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் – தெற்கு ரயில்வே அறிவிப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகள் வசதிக்காக, சென்னைச் சென்ட்ரல், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து போத்தனூர், செங்கோட்டை மற்றும் நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

போத்தனூர் செல்லும் ரயில்:

சென்னை சென்ட்ரலிலிருந்து ஆகஸ்ட் 14 ஆம் தேதி இரவு 11.50 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (எண் 06027) புறப்பட்டு, ஆகஸ்ட் 15ஆம் தேதி காலை 8.30 மணிக்கு போத்தனூரை அடையும்.

திரும்பும் பயணமாக, போத்தனூரிலிருந்து ஆக.17 ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு அதே வகை சிறப்பு ரயில் (06028) புறப்பட்டு, ஆக.18 காலை 8.20 மணிக்கு சென்ட்ரலுக்கு வந்து சேரும்.

செங்கோட்டை செல்லும் ரயில்:

சென்னை எழும்பூரிலிருந்து ஆக.14 ஆம் தேதி இரவு 9.55 மணிக்கு சிறப்பு ரயில் (06089) புறப்பட்டு, ஆக.15 ஆம் தேதி காலை 11.30 மணிக்கு செங்கோட்டையை அடையும்.

மறுமுகமாக, செங்கோட்டையிலிருந்து ஆக.17 ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு சிறப்பு ரயில் (06090) புறப்பட்டு, சென்னையை ஆக.18 ஆம் தேதி காலை 9.05 மணிக்கு அடையும்.

நாகர்கோவில் ரயில் சேவை:

நாகர்கோவிலிலிருந்து ஆக.17 ஆம் தேதி இரவு 11.15 மணிக்கு வாராந்திர சிறப்பு ரயில் (06012) புறப்பட்டு, தாம்பரத்தை ஆக.18 காலை 10.55 மணிக்கு அடையும்.

திரும்பும் பயணமாக, தாம்பரத்தில் இருந்து ஆக.18 அன்று பிற்பகல் 3.30 மணிக்கு (06011) சிறப்பு ரயில் புறப்பட்டு, நாகர்கோவிலை ஆக.19 அதிகாலை 5.15 மணிக்கு சென்றடையும்.

மேலும்:

மங்களூர் சந்திப்பு மற்றும் திருவனந்தபுரம் வடக்கு இடையே வாரத்திற்கு இரு முறை சிறப்பு ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு டிக்கெட்டுகள் இன்று ஆக.8 ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது என தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments Box