எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரித்த நீதிபதி மாற்றம்: தலைமை நீதிபதியின் அறிவிப்பு
சென்னை உயர் நீதிமன்றத்தில் எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் தொடர்பான வழக்குகளை விசாரித்து வந்த நீதிபதி பி.வேல்முருகன் மாற்றப்பட்டுள்ளார். அந்த பொறுப்பை இனி நீதிபதி என்.சதீஷ்குமார் மேற்கொள்ள உள்ளதாக தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா உத்தரவிட்டுள்ளார்.
உயர் நீதிமன்ற நீதிபதிகளின் வழக்கு விசாரணை இலாகாக்கள் சாதாரணமாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்றப்படும். இவ்விருப்பம்தான் செப்டம்பர் மாதத்தில் நடைமுறைக்கு வரவிருந்தது. ஆனால், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா இந்த மாற்றத்தை ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் வகையில் முன்கூட்டியே அறிவித்துள்ளார்.
அதன்படி,
- நீதிபதி பி.வேல்முருகன், மேல்முறையீடு மற்றும் சிவில் மறுஆய்வு வழக்குகளை விசாரிக்கும் பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.
- நீதிபதி என்.சதீஷ்குமார், எம்.பி., எம்.எல்.ஏ வழக்குகளை விசாரிக்க புதிய பொறுப்பேற்றுள்ளார்.
- குற்றவியல் மற்றும் முன்ஜாமீன் தொடர்பான வழக்குகளை நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் காணவுள்ளார்.
- இந்துசமய அறநிலையத்துறை, சினிமா, மின்வாரியம் தொடர்பான வழக்குகளை நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ் விசாரிக்க உள்ளார்.
- சிபிஐ வழக்குகள் நீதிபதி எம். நிர்மல்குமார் விசாரிக்கவுள்ளார்.
- குற்றவியல் மேல்முறையீட்டு வழக்குகளை நீதிபதி ஜி.கே. இளந்திரையன் விசாரிக்க உள்ளார்.
இதற்குப் பிறகும் பல நீதிபதிகளின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Facebook Comments Box