மணக்குள விநாயகர் கோயில் முழுமையாக ஏசி வசதியுடன் சீரமைப்பு – முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்
புதுச்சேரியில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் முழுவதும் ஏசி வசதி அமைக்கப்பட்டதை, இன்று முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார்.
சமீபத்தில் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசிக்க வரும் முக்கியமான கோயல்களில் ஒன்று கடற்கரைக்கு அருகிலுள்ள மணக்குள விநாயகர் கோயில். நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளதால், தினமும் பொதுமக்கள், வர்த்தகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து தரிசனம் செய்கிறார்கள்.
பக்தர்களின் வசதிக்காகவும், அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, ரூ.33 லட்சம் செலவில் தேவஸ்தானம் முழுவதும் குளிர்பதன வசதிகள் ஏற்படுத்தும் பணி துவங்கப்பட்டது. இந்த பணிக்காக தேவஸ்தான நிதியிலும் பக்தர்களின் நன்கொடையிலும் இருந்து தொகை ஒதுக்கப்பட்டது.
மொத்த செலவில் ஒரு மூன்றில் ஒரு பங்கு தொகையான ரூ.11.90 லட்சத்தை யூகோ வங்கி நன்கொடையாக வழங்கியது. பணி முழுமையாக முடிவடைந்ததைத் தொடர்ந்து, இன்று அந்த வசதிகளை முதலமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார்.
இந்த தொடக்க நிகழ்ச்சியில் பொது பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ், சிவாச்சாரியார்கள் மற்றும் கோயில் நிர்வாக பணியாளர்கள் பங்கேற்றனர்.