கிள்ளியூர் BMS சார்பில் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
பாரதிய மஸ்தூர் சங்கம் (BMS) கிள்ளியூர் ஒன்றியத்தின் சார்பில், வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.00 மணிக்கு, நல்லூர் பஞ்சாயத்து குறும்பேற்றி பகவதி அம்மன் மண்டபத்தில் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில், தொழிலாளர்களின் நலனுக்காக அரசு வழங்கும் பல்வேறு நலத்திட்டங்களின் பயன்களை பெறுவதற்கான தகவல்கள் வழங்கப்பட்டு, புதிய உறுப்பினர்கள் பதிவு செய்யப்படவுள்ளனர். BMS ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ள அழைக்கப்பட்டுள்ளனர்.
அன்றைய தினம், குறும்பேற்றியில் மதியம் 2.30 மணிக்கு ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் செயற்குழு கூட்டமும் நடைபெறும். இதில், சங்கத்தின் வருங்கால திட்டங்கள், தொழிலாளர் பிரச்சினைகள், நலத்திட்ட கோரிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்படும் என ஒன்றிய பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒன்றிய பொறுப்பாளர்கள் அனைவரும், இந்த முகாம் மற்றும் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு, பாரதிய மஸ்தூர் சங்கம் (BMS) கிள்ளியூர் ஒன்றியம் சார்பில் அன்புடன் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.