பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை கலந்தாய்வில் 3-ம் சுற்றில் 64,629 மாணவர்களுக்கு இடங்கள் தற்காலிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 423 பொறியியல் கல்லூரிகளில், இளநிலை படிப்புகளுக்கான அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மொத்தம் 1,87,227 உள்ளன.

  • முதல் 2 சுற்று கலந்தாய்வில் 92,423 இடங்கள் நிரம்பியுள்ளன.
  • 3-ம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 7-ம் தேதி தொடங்கியது. இதில் 1,01,589 மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
  • கலந்தாய்வில் பங்கேற்று தேர்வு செய்த 62,533 மாணவர்களுக்கு இடங்கள் தற்காலிகமாக ஒதுக்கப்பட்டுள்ளன.
  • அரசு பள்ளி மாணவருக்கான 7.5% இட ஒதுக்கீட்டில் 2,096 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

தற்காலிக இடஒதுக்கீடு பெற்றவர்கள் இன்று (ஆகஸ்ட் 11) மாலை 5 மணிக்குள் உறுதிப்படுத்த வேண்டும். அதன் பின்னர் மட்டுமே இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும்.

இறுதி ஒதுக்கீடு ஆகஸ்ட் 12 காலை 10 மணிக்கு வெளியாகும். மாணவர்கள் அதை பதிவிறக்கம் செய்து ஆகஸ்ட் 17-ம் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்.

அப்வேர்டு (Upward) தேர்வாளர்களுக்கு ஆகஸ்ட் 20-ம் தேதி இட ஒதுக்கீட்டு ஆணை வழங்கி, பொது கலந்தாய்வு நிறைவு பெறும்.

துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:

மொத்த 1,87,227 இடங்களில் சுமார் 1,58,000 இடங்கள் நிரம்பியுள்ளன. சுமார் 29,000 இடங்கள் காலியாகி உள்ளன. அவை துணை கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.

மேலும் விவரங்களுக்கு www.tneaonline.org என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கலாம்.

Facebook Comments Box