திருச்சி: கரடி உலாவதால் புளியஞ்சோலை சுற்றுலா தளம் தற்காலிகமாக மூடப்பட்டது
திருச்சி நாமக்கல் மாவட்ட எல்லையில் உள்ள கொல்லிமலை அடிவாரத்திலுள்ள புளியஞ்சோலை சுற்றுலா தளத்தில் கரடி உலாவுவதாக தகவல் பெறப்பட்டதைத் தொடர்ந்து, சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்புக்காக இன்று காலை முதல் சுற்றுலா தளம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மூடப்பட்டுள்ளது.
புளியஞ்சோலை சுற்றுலா தளம் திருச்சி மற்றும் நாமக்கல் மாவட்ட எல்லையில் அமைந்துள்ள தரைப்பகுதியில் உள்ளது. இதற்கு மேல் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் கரடி உலாவுவதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்ட வன அலுவலர் மாதவி யாதவ் கூறியதாவது:
“நேற்று மாலை 5 மணியளவில் கரடி ஒன்று புளியஞ்சோலை சுற்றுலா தளத்தில் சுற்றி நடந்து கொண்டிருப்பது காணப்பட்டது. கரடி மலைப்பகுதிக்கு சென்று விடும் என எதிர்பார்க்கிறோம். அப்போது சுற்றுலா தளம் மீண்டும் திறக்கப்படும்.”
அதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பிற்காக இப்பொழுது தளம் மூடப்பட்டுள்ளது.