சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு சிறப்பு கட்டணச் சலுகைகளை அறிவித்துள்ளன.
இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை ஒட்டி, ஆகஸ்ட் 11 முதல் 15 வரை, இணையதளம், மொபைல் ஆப், டிக்கெட் கவுன்டர்கள் உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு இந்த சலுகை கிடைக்கும்.
உள்நாட்டு விமானப் பயணங்கள் ரூ.1,279 முதல், வெளிநாட்டு பயணங்கள் ரூ.4,279 முதல் தொடங்கும். கூடுதலாக, பயணிகள் லக்கேஜ் எடுத்துச் செல்லும் கட்டணத்திலும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சலுகை டிக்கெட்டுகள் மூலம் பயணிகள் 2024 ஆகஸ்ட் 19 முதல் 2026 மார்ச் 31 வரை தங்களுக்கு விருப்பமான தேதிகளில் பயணம் செய்யலாம். சுமார் 50 லட்சம் பயணிகள் இதன் பயனாளர்களாக இருக்க முடியும் என்று விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
Facebook Comments Box