விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்தவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் இன்று மதியம் வெடி விபத்து ஏற்பட்டது.  
வெடி விபத்தில் அச்சங்குளம் ஏழாயிரம்பண்ணை, அன்பின் நகரம் பகுதிகளைச் சேர்ந்த 6 பேர் பலியாகினர். பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  
இந்நிலையில் தமிழக ஆளுநர் இரங்கல் தெரிவித்து வெளியிட்டுள்ள செய்தியில்,
வெடிவிபத்தில் உயிரிழந்தோர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக மக்களுடன் இணைந்து, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் எனத் தெரிவித்தார்.
Facebook Comments Box