கஞ்சா, கள்ளச்சாராயத்தை மத்திய அரசுதான் தடுக்க வேண்டும் – அமைச்சர் எஸ். ரகுபதி

தமிழகத்தில் கஞ்சா உற்பத்தியும், கள்ளச்சாராயக் காய்ச்சலும் நடைபெறவில்லை; இவை வெளி மாநிலங்களில் இருந்து வருவதை மத்திய அரசே தடுக்க வேண்டும் என மாநில அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

  • பீகார் மாநில வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரம் உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளது.
  • தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் தேர்தல் ஆணையம் தவறு செய்தால், அதையும் உச்ச நீதிமன்றத்தில் எடுத்துச் செல்வோம்.

அவர் மேலும் கூறுகையில்:

“தமிழகத்தில் கஞ்சாவும் உற்பத்தியாகவில்லை; சாராயமும் காய்ச்சப்படவில்லை. வெளி மாநிலங்களில் இருந்து வருவதை தடுக்க மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும்.

மத்திய அரசைக் குற்றம் சொன்னால், வருமானவரி, அமலாக்கத் துறை சோதனை வந்துவிடுமோ என்ற பயத்தில், பாமக தலைவர் ராமதாஸ் தமிழக அரசையே குறைகூறி வருகிறார்.

மணல் குவாரி தொடங்குவதற்கு உயர் நீதிமன்றத்தில் அனுமதி ஓரிரு நாட்களில் கிடைக்கும் என நம்புகிறோம்.”

Facebook Comments Box