தேமுதிகவின் 21ஆம் ஆண்டு கொடி நாள் விழா கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் பிரச்சார வாகனத்தில் நின்றவாரு அக்கட்சியின் கொடியினை ஏற்றி வைத்தார். அப்போது பேசிய
விஜயகாந்த், அனைவருக்கும் கொடி நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்றார். அவரைத் தொடர்ந்து பேசிய பிரேமலதா: அனைவருக்கும் கொடி நாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விஜயகாந்த் விரைவில் பிரச்சாரம் செய்வார் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், தேமுதிக கொடி நாள் விழா கேப்டன் விஜயகாந்த் அவர்களின் தலைமையில் 21 ஆம் ஆண்டு விழா தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. விவாதங்களில் தேமுதிக சார்பாக நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும் என்று நிர்வாகிகள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் இனி அனைத்து விவாதங்களிலும் தேமுதிக நிர்வாகிகள் பங்கேற்பார்கள்.
யார் யார் விவாதங்களில் பங்கேற்க வேண்டும் என்பதை தலைமை கழகம் விரைவில் அறிவிக்கும். சசிகலாவை நான் சந்திக்கவுள்ளேன் என்பதை நானே தொலைக்காட்சியை பார்த்து தான் தெரிந்து கொண்டேன், எனவே இனி செய்தி வெளியிடுவதற்கு முன்பாக தலைமை கழகத்தின் தகவல் பெற்ற பின்பு செய்தியை வெளியிட வேண்டும். தமிழ்நாடு முழுவதும் 7 மண்டலமாக பிரிக்கப்பட்டு தேர்தலை சந்திக்க தயாராக உள்ளோம்.
கூட்டணி குறித்து செய்தியாளர்களை எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், கூட்டணி குறித்து அதிமுகவுடன் கேள்வி எழுப்ப வேண்டும். பிரதமர் 3 மணி நேரம் தான் சென்னையில் இருக்க உள்ளார் என்று செய்தி வெளியாகி உள்ளது, ஆனால் இன்னும் எதுவும் உறுதியாகவில்லை என்றார். பிரதமரை வரவேற்க செல்வீர்களா என்று கேட்டதற்கு, தேமுதிக வரவேற்பு அளிக்க அழைத்தால் அதுகுறித்து முடிவெடுக்கப்படும். கூட்டணி பேச்சுவார்த்தை எந்த கட்சியும் தற்போது வரை துவங்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரண வழக்கு தமிழக அரசியல் மற்றும் சட்ட பிரிவுகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜெயக்குமார், கடந்த ஜூன்...
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில், திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு கிளர்ச்சிக் குழுக்களுடன் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. திரிபுரா மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்த மத்திய அரசும்,...
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மர்ம மரணம் தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளர் சுபிகாரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை...
கடந்த மாத இறுதியில், 30 வட கொரிய அதிகாரிகள் வெள்ளத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகளைத் தடுக்கத் தவறியதற்காக தூக்கிலிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. வடகொரியாவில் வடமேற்கில் கடந்த மாதம் பெய்த மழையால்...
Discussion about this post