திருச்சி | மாடு மீது மோதியதில் ‘வந்தே பாரத்’ ரயில் சேதம்
விருத்தாசலம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற மாடு மீது மோதியதால், ‘வந்தே பாரத்’ ரயிலின் முன்பகுதி சேதமடைந்தது.
சென்னை எழும்பூரிலிருந்து திருநெல்வேலிக்கு சென்ற வந்தே பாரத் ரயில், நேற்று முன்தினம் மாலை விருத்தாசலத்தை அடுத்த மணலூர் அருகே சென்றபோது, திடீரென தண்டவாளத்தை கடக்க வந்த மாட்டுடன் மோதியது.
இந்த விபத்தில், ரயிலின் ஏரோடைனமிக் முன்பகுதி சேதமடைந்தது. மாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதனால் ரயில் சேவை சுமார் 15 நிமிடங்கள் தாமதமானது.
பின்னர், பயணிகளின் பாதுகாப்பை ஆபத்துக்குள்ளாக்கியதற்காக, ரயில்வே சட்டம் 1989 பிரிவு 154-ன் கீழ், ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் வழக்கு பதிவு செய்து, மாட்டின் உரிமையாளரான மணலூரைச் சேர்ந்த சிவக்குமாரை கைது செய்தனர்.
Facebook Comments Box