தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்பு
திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் செயல்படும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 10வது பட்டமளிப்பு விழாவில், இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சிறப்பு விருந்தினராக பங்கேற்று பட்டங்களை வழங்க உள்ளார் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், நாட்டின் மத்திய அரசு பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இங்கு இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் மாணவ, மாணவிகள் கல்வி கற்கின்றனர். கடந்த ஆண்டு 9வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டிருந்தாலும், கடைசி நேரத்தில் அவரது வருகை ரத்து செய்யப்பட்டது.
ஆனால் இம்முறை, வரும் செப்டம்பர் 3 அன்று நடைபெறும் விழாவில் அவர் பங்கேற்பது உறுதியாகியுள்ளது. இந்த தகவல் வெளிவந்ததையடுத்து, மாணவர்களும், பேராசிரியர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.