ஆளுநரின் சுதந்திர தின தேநீர் விருந்து: காங், விசிகவைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் புறக்கணிப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர். என். ரவி நடத்த உள்ள தேநீர் விருந்தை, தமிழக காங்கிரஸ் மற்றும் விசிக கட்சிகளைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் ஆளுநராக பொறுப்பேற்றதிலிருந்து ஆர். என். ரவி, கூட்டாட்சி கொள்கைக்கு முரணாகவும், மாநில நலனுக்கு விரோதமாகவும், அரசமைப்புச் சட்டத்தை மீறியும் செயல்பட்டு வருகிறார்.

உச்ச நீதிமன்றம் ஆளுநர்களின் அதிகார வரம்பு குறித்து தெளிவாக தீர்ப்பளித்த பிறகும், அவர் தனது பழைய நிலைப்பாட்டைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட கலைஞர் பல்கலைக்கழக மசோதாவிற்கு ஒப்புதல் வழங்காமல், அதை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி, நீதிமன்ற உத்தரவையும் மதிக்காத நிலையில் உள்ளார்.

இந்த நிலைப்பாட்டை எதிர்த்து, சுதந்திர தினத்தன்று நடைபெறும் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்க முடிவு செய்துள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box