சென்னை: மின்சார ரயில் சேவையில் 3 நாட்கள் மாற்றம்
சென்னை சென்ட்ரல்–கூடூர் பாதையில், பொன்னேரி–கவரைப்பேட்டை இடையே நடைபெறவுள்ள பொறியியல் பணிகள் காரணமாக, மொத்தம் 19 மின்சார ரயில் சேவைகள் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, ஆகஸ்ட் 14, 16, 18 தேதிகளில் —
- சென்னை சென்ட்ரல்–கும்மிடிப்பூண்டி: காலை 10.30, முற்பகல் 11.35 மணிக்கு புறப்படும் ரயில்கள் ரத்து.
- சென்னை சென்ட்ரல்–சூலூர்பேட்டை: காலை 10.15, நண்பகல் 12.10, மதியம் 1.05 மணிக்கு புறப்படும் ரயில்கள் ரத்து.
- சூலூர்பேட்டை–சென்னை சென்ட்ரல்: மதியம் 1.15, பிற்பகல் 3.10, இரவு 9.00 மணிக்கு புறப்படும் ரயில்கள் ரத்து.
அதே தேதிகளில் —
- சென்னை கடற்கரை–கும்மிடிப்பூண்டி: காலை 9.40, நண்பகல் 12.40 மணிக்கு புறப்படும் ரயில்கள் ரத்து.
- கும்மிடிப்பூண்டி–சென்னை கடற்கரை: காலை 10.55 மணிக்கு புறப்படும் ரயில் ரத்து.
- கும்மிடிப்பூண்டி–சென்னை சென்ட்ரல்: நண்பகல் 12.00, பிற்பகல் 2.30, 3.15 மணிக்கு புறப்படும் ரயில்கள் ரத்து.
- சூலூர்பேட்டை–நெல்லூர்: பிற்பகல் 1.15 மணிக்கு புறப்படும் ரயில் ரத்து.
- நெல்லூர்–சூலூர்பேட்டை: மாலை 6.45 மணிக்கு புறப்படும் ரயில் ரத்து.
மேலும், செங்கல்பட்டு–கும்மிடிப்பூண்டி காலை 9.55 மணிக்கு புறப்படும் ரயில், சென்னை கடற்கரை–கும்மிடிப்பூண்டி இடையே பகுதி ரத்து செய்யப்படும். கும்மிடிப்பூண்டி–தாம்பரம் பிற்பகல் 3.00 மணிக்கு புறப்படும் ரயில், கும்மிடிப்பூண்டி–சென்னை கடற்கரை இடையே பகுதி ரத்து செய்யப்படும்.
ரத்து செய்யப்பட்ட மின்சார ரயில்களுக்கு மாற்றாக, அதே தேதிகளில், சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரை நிலையங்களில் இருந்து பொன்னேரி வரை தலா ஒரு பயணிகள் சிறப்பு ரயில் இயக்கப்படும். மேலும், மீஞ்சூர்–சென்னை சென்ட்ரல் இடையிலும் ஒரு சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படும்.