சிறப்பான புலன் விசாரணை மற்றும் அர்ப்பணிப்புடன் பணி: 15 காவல் அதிகாரிகள் சிறப்பு பதக்கத்திற்கு தேர்வு

சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழக அரசு 15 காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பு பதக்கங்களை அறிவித்துள்ளது.

உள்துறை செயலர் தீரஜ் குமார் வெளியிட்ட தகவலின்படி, புலனாய்வுப் பணியில் சிறப்பாக செயல்பட்டு, அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த 10 அதிகாரிகள் “முதல்வரின் காவல் புலனாய்வு சிறப்புப் பணிப் பதக்கம்” பெற உள்ளனர்.

அவர்களின் பெயர்கள்:

  • பூரணி – காவல் துணை கண்காணிப்பாளர், சைபர் கிரைம் செல், சென்னை
  • உலகராணி – காவல் ஆய்வாளர், திருநெல்வேலி CCB
  • லதா – காவல் ஆய்வாளர், கடத்தல் தடுப்பு பிரிவு, சென்னை
  • செந்தில் குமார் – காவல் ஆய்வாளர், மகுடஞ்சாவடி, சேலம்
  • கல்பனாதத் – துணை காவல் கண்காணிப்பாளர், தஞ்சாவூர் CCB
  • சந்தானலட்சுமி – காவல் ஆய்வாளர், திண்டுக்கல் CCB
  • வசந்தகுமார் – காவல் ஆய்வாளர், பெரு மாநல்லூர், திருப்பூர்
  • ஜெகநாதன் – காவல் ஆய்வாளர், வடக்கு காவல் நிலையம், திருப்பூர்
  • திலகாதேவி – காவல் ஆய்வாளர், அரியலூர் CCB
  • புவனேஸ்வரி – காவல் ஆய்வாளர், நாகப்பட்டினம் CCB

அதேபோல், பொதுமக்கள் சேவையில் சிறப்பாக செயல்பட்ட 5 அதிகாரிகள் “முதல்வரின் சிறந்த பொதுச் சேவை காவல் பதக்கம்” பெற உள்ளனர்.

அவர்கள்:

  • மஹேஷ்வர் தயாள் – கூடுதல் டிஜிபி, சிறைத்துறை
  • மகேஷ் – டிஐஜி, நுண்ணறிவு பிரிவு (உள்நாட்டு பாதுகாப்பு)
  • சிலம்பரசன் – காவல் கண்காணிப்பாளர், திருநெல்வேலி
  • பிரவின்குமார் – கூடுதல் காவல் கண்காணிப்பாளர், தலைமையக தனிப்பிரிவு CCB, சென்னை
  • மேரிரஜு – காவல் ஆய்வாளர், சென்னை

ஒவ்வொருவருக்கும் தலா 8 கிராம் தங்கப் பதக்கமும் ரூ.25,000 ரொக்கப் பரிசும் வழங்கப்படும். விருதுகள் முதல்வரால் விரைவில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும்.

Facebook Comments Box