விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு பாஜக முக்கிய தலைவர்களின் ஒருவரான எச்.ராஜா வருகை தந்தார். பின்னர், அவர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எச்.ராஜா;- பிரதமர் மோடி தலைமையிலான அரசில், தமிழகத்தை சேர்ந்த தமிழச்சி தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நெடுஞ்சாலை, மெட்ரோ ரயில், கடல் பாசி பூங்கா மற்றும் துறைமுக மேம்பாட்டிற்காக ரூ. 2 லட்சம் கோடி கிடைத்துள்ளது. திமுக-காங்கிரஸ் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் கூட 10 ஆண்டுகளில் இவ்வளவு நிதி கொடுக்கவில்லை.
தமிழ்நாட்டு மக்கள், யார் தமிழக நலனில் அக்கறை கொண்டு செயல்படுகின்றனர் என்பதை அறிந்து வருகிற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சசிகலா வருகையால் அதிமுக ஆட்சிக்கோ, அதனுடைய செல்வாக்கிற்கோ எவ்வித பிரச்சனையும் இல்லை என எச்.ராஜாதெரிவித்துள்ளார்.
Facebook Comments Box