தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு கூடவிருக்கும் நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார்;- 7 பேர் விடுதலை விவகாரத்தில் விரைவில் ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார். ஆளுநருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறோம். நளினியை தவிர வேறு யாரையும் விடுதலை செய்யக்கூடாது என்று திமுக கூறி வந்தது. 7 பேர் விடுதலை விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுகிறது. மன்னிப்பு கோரினால் தினகரனை அதிமுகவில் சேர்ப்பது பற்றி கே.பி.முனுசாமி கூறியது அதிமுக கருத்தல்ல, அவரின் தனிப்பட்ட கருத்து என்றார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னம் வழங்கக்கூடாது என்று தினகரன் தரப்பு தேர்தல் ஆணையத்திற்கு இன்று செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவை முடக்க வேண்டும் என்று நினைப்பவர்களை எப்படி தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்கள். இரட்டை இலையை முடக்குவதற்கு எந்த கொம்பனாலும் முடியாது.
தற்போது கட்சியும், ஆட்சியு்ம சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அதிமுகவில் அடிப்படை உறுப்பினர் உள்பட எந்த பொறுப்பிலும் சசிகலா இல்லை. சசிகலா தனது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தியது சட்டவிரோதம். இது தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Discussion about this post