ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் இவர்கள்தான். தேர்தலை நடத்துவது தேர்தல் தொடர்பாக வரும் புகார்களை கவனித்து தீர்ப்பது, வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்குவது உள்ளிட்ட அனைத்து பணிகளையும் இந்த தேர்தல் அதிகாரிகள்தான் கவனிப்பார்கள்.
தேர்தல் நோட்டிபிகேஷன் வந்தது முதல் வேட்பாளருக்கு வெற்றிச் சான்றிதழ் கொடுக்கும் வரை இவரது பணி தொடர்ந்து கொண்டே இருக்கும். இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேர்தல் வழக்கத்தை விட முன்கூட்டியே நடத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படும் நிலையில் தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளதாக அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பு அடைந்து உள்ளனர்.
The post 234 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நியமனம்… தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாஹு உத்தரவு appeared first on தமிழ் செய்தி.
Discussion about this post