வேலூரில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையை பின்பற்றாத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

வேலூரில் போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயம் ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் நடைபெற்றது.

அப்போது பேசிய அவர், போதைப்பொருள் விற்பனையை கண்காணித்து நடவடிக்கை எடுக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு போதை ஒழிப்பு நடவடிக்கையில் கடமையை பின்பற்றாத அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Facebook Comments Box