புதிய குற்றவியல் தீர்ப்புகள் தொடர்பான கருத்தரங்கு மிகவும் அவசியமானது என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை வண்டலூர் – கேளம்பாக்கம் சாலையில் உள்ள வேலூர் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற குற்றவியல் நீதி அமைப்பு நிர்வாகத்தில் இந்தியாவின் முன்னேற்றப் பாதை குறித்த மாநாட்டில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், “சிறந்த நீதி நூல் திருக்குறள்” என்றும், ராமாயணத்தில் நீதி பற்றி தெளிவாக கூறப்பட்டுள்ளது என்றார்.
மேலும் பேசிய அவர், “சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு பிறகு மகாத்மா காந்தியின் கனவு தற்போது நிறைவேறி உள்ளது.மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு இந்தியா வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.
Discussion about this post