தொடர் விடுமுறை காரணமாக சென்னை மக்கள் சொந்த ஊர் பயணம் – 3 லட்சம் பேர் பேருந்து சேவை பயன்படுத்தினர்
சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, ஞாயிறு விடுமுறை என தொடர்ந்து விடுமுறை கிடைத்ததால், சென்னையிலிருந்து சுமார் 3 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு திரும்பினர். இதற்காக போக்குவரத்துத் துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டன.
நேற்று அதிகாலை 3 மணி வரை வழக்கமாக இயங்கும் 2,092 பேருந்துகளுக்கு கூடுதலாக 1,160 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. மொத்தம் 3,252 பேருந்துகளில் மட்டும் 1.78 லட்சம் பயணிகள் சென்றனர்.
சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் போன்ற இடங்களில் இருந்து தேவைக்கேற்ப பேருந்துகள் இயக்கப்பட்டதால், கடந்த 2 நாட்களில் மொத்தம் சுமார் 3 லட்சம் பேர் பயணமாகினர்.
மேலும், நாளை ஊர் திரும்பும் பயணிகளுக்காக சென்னை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு 715 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. முன்பதிவு எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பயணிகள் முன்கூட்டியே டிக்கெட் பதிவு செய்யுமாறு போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.