டிட்டோஜேக் ஆசிரியர்கள் கூட்டமைப்பு போராட்டம் – அமைச்சர் அன்பில் மகேஸ் நாளை பேச்சுவார்த்தை நடத்துகிறார்
டிட்டோஜேக் கூட்டமைப்பு, தலைமைச் செயலகத்தை வரும் 22-ம் தேதி முற்றுகையிட இருப்பதாக அறிவித்துள்ளது.
இதையடுத்து, டிட்டோஜேக் சங்க நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்க தொடக்கக் கல்வித் துறை முன்வந்தது. முதலில், ஆலோசனைக் கூட்டம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நிர்வாக காரணங்களால் அந்த கூட்டம் ஆகஸ்ட் 18-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.
அதன்படி, நாளை (18-ம் தேதி) சென்னையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் கூட்டம் நடைபெற உள்ளது.
Facebook Comments Box