“தருமபுரியை திமுக புறக்கணிக்கவில்லை” – அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பதில்
தருமபுரி மாவட்டத்தை திமுக புறக்கணிக்கவில்லை என்றும், புறக்கணித்திருந்தால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 100% வெற்றி சாத்தியமாகியிருக்குமா என்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில்,
- “அன்புமணி ராமதாஸ் கூறிய, தருமபுரியை முதல்வர் புறக்கணித்து வருகிறார் என்ற குற்றச்சாட்டு விரக்தியின் வெளிப்பாடு.
- தன் இயலாமையை மறைக்க, தருமபுரியை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்.
- திமுக அரசு எந்த பாகுபாடுமின்றி, ‘திராவிட மாடல்’ அடிப்படையில் தருமபுரியையும் சமமாக வளர்த்து வருகிறது. இதனை அடுத்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தும்” என்று குறிப்பிட்டார்.
முக்கிய விளக்கங்கள்
- மொரப்பூர் – தருமபுரி அகல ரயில் பாதை திட்டம் : 2023-இல் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, 60% நில எடுப்பு பணிகள் முடிவடைந்துள்ளன. இதுவரை 2000 நில உரிமையாளர்களுக்கு ₹29 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
- காவிரி உபரி நீர் திட்டம் : உச்சநீதிமன்றத் தீர்ப்பு கிடைத்த பிறகே புதிய ஆய்வுகள் சாத்தியம். இருப்பினும், அன்புமணி உண்மைகளை மறைத்து மக்களை ஏமாற்றுகிறார்.
- சிப்காட் தொழிற்பூங்கா திட்டம் : 200 ஏக்கரில் ரூ.93 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே 7 நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், அன்புமணியின் நாடாளுமன்ற பங்கேற்பு 30% மட்டுமே இருந்ததையும், அவர் தருமபுரிக்காக சாதித்தது குறைவு என்றும் அமைச்சர் விமர்சித்தார்.
Facebook Comments Box