புதுச்சேரியில் கலைஞர் அறிவாலயம் கட்டுமானத்திற்கு அடிக்கல் நாட்டுவிழா
புதுச்சேரியின் கிழக்கு கடற்கரைச் சாலையில் கலைஞர் அறிவாலயம் கட்டுமானப் பணிக்கான அடிக்கல் நாட்டுவிழா இன்று நடைபெற்றது.
திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஆகியோர், புதுச்சேரியில் திமுகக்கு சொந்தமான 3,000 சதுர அடி நிலத்தில், சிவாஜி சிலைக்கு அருகே கலைஞர் அறிவாலயம் கட்ட அனுமதி வழங்கினர்.
இதன் பின்னர், திமுக சார்பில் கலைஞர் அறிவாலயம் கட்டுமான திட்ட வரைபடம் தயாரிக்கப்பட்டு, புதுச்சேரி நகர வளர்ச்சிக் குழுமத்திடம் அனுமதி கோரப்பட்டது. அனுமதி பெறப்பட்டவுடன், இன்று (வெள்ளிக்கிழமை) காலை அடிக்கல் நாட்டுவிழா புதுச்சேரி திமுக அமைப்பாளர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் எஸ்பி சிவக்குமார், எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.